பொருளாதார நெருக்கடி: இந்தியாவிடம் தஞ்சம் கோரிய இலங்கையர்கள்

OruvanOruvan

family from Sri Lanka illegally enter India

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து நன்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை (29) இரவு இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நால்வரும் பணம் செலுத்தி இலங்கையில் இருந்து சட்டவிரோத படகில் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையினர் குறித்த குடுப்பத்தினை மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்படி, இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது.