இலங்கையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 351,303 ஆக பதிவு: புள்ளிவிபரத் திணைக்கம் தகவல்

OruvanOruvan

கடந்த ஆண்டின் (2023) நான்காம் காலாண்டில், வேலையின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை 351,303 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதில் ஆண்களிக் வேலையின்மை விகிதம் 3.1 சதவீதமாகவும், பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 6.8 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதுக் குழுக்களைக் கருத்தில் கொண்டால், இந்தக் காலப்பகுதியில் 25-29 வயதுக்குட்பட்ட 98,118 பேர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகைமைகளின் படி இந்த காலாண்டில் க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற 148,092 பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும், சாதாரண தரத்தில் சித்தியடைந்த 92,586 பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சாதாரண தரத்தில் சித்தியடையாத 110,624 பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.