இலங்கை வைத்தியசாலையில் ஆபாச காணொளி காண்பிக்கப்பட்டதா?: உண்மையை வெளிப்படுத்தும் factseeker

OruvanOruvan

இலங்கையில் உள்ள வைத்தியசாலையொன்றின் காத்திருப்பு அறையில் (Waiting room) ஆபாச காணொளி காண்பிக்கப்பட்டதாக எக்ஸ் (X) சமூகவலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக காணொளியொன்று பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளி இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் அல்ல என்பதையும், இது நீண்ட நாட்களுக்கு முன்னர் ஆபிரிக்க நாடொன்றில் பதிவாகியருந்த சம்பவம் என்பதையும் factseeker கண்டறிந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி, ஜெய்சன் கார்டோனா (jeison cardona) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் இந்த காணொளியை பதிவேற்றியுள்ளார்.

இதன்படி, இந்த சம்பவம் அன்டிகுவா நாட்டில் பதிவாகியது என்பதையும் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளியை, இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் எனக்கூறி நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளதுடன், பின்னர் தாம் தவறான தகவல் ஒன்றை பதிவேற்றியமைக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

இருப்பினும், இந்த தகவலை தவறாக பதிவேற்றிய குறித்த நபர் இதுவரை அந்தக் காணொளியை தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்காதுள்ளார்.

இந்த நிலையிலே, அவரை பின்தொடரும் பலரும் இந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருவதுடன், இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் என்றே பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்த பின்னணியில், இவ்வாறு இலங்கையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியதாக பகிரப்படும் காணொளி தவறானது என்பதை factseeker உறுதிப்படுத்தியுள்ளது.