எரிபொருள் விலையில் திருத்தம்: புதிய விலை விபரங்கள் அறிவிப்பு

OruvanOruvan

Fuel Price

இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது.

இதன்படி, பெட்ரோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபா ஆகும்.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்று 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 386 ரூபா ஆகும்.

இதேவேளை மண்ணெண்ணெய் விலை லீட்டர் ஒன்று 12 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள்:

பெட்ரோல் ஒக்டேன் 92 - 371 ரூபா

பெட்ரோல் ஒக்டேன் 95 - 440 ரூபா

ஆட்டோ டீசல் - 363 ரூபா

சூப்பர் டீசல் - 386 ரூபா

மண்ணெண்ணெய் - 245 ரூபா