நுவரெலியாவில் உணவகமொன்றில் தீப்பரவல்: விசாரணை ஆரம்பம்

OruvanOruvan

Fire breaks out at restaurant in Nuwara Eliya

நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீ பரவல் காரணமாக உயிர் சேதம் ஏற்படாத போதிலும், பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.