நிலவும் வறட்சியால் 10,000 பேர் பாதிப்பு: வெப்பமான காலநிலை ஏப்ரல் முழுவதும் பாரிய தாக்கம் செலுத்தும்

OruvanOruvan

நிலவும் வறட்சி காரணமாக இலங்கையில் 3,027 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டம் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 7,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் மேலும் 2,813 பேர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னாகவே அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்படும் என வானிலையாளர்கள் முன்னதாகவே எச்சரித்துள்ளனர்.

அதேபோன்று அதிகரித்த வெப்பநிலையால் தோல் நோய்கள் , கால்நடைகள் பாதிப்பு, நிலப்பரப்பு சேதம், நீர் விநியோகத்தடை போன்றன இலங்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளன.