கொழும்பு நோக்கி வந்த அதிவேக ரயில் மோதி இருவர் உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை

OruvanOruvan

Train

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற அதிவேக ரயில் மோதியதில் ராகம பகுதியில் இருவேறு இடங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ராகம ரயில் டவை மற்றும் ராகம துடுவேகெதர பிரதேசத்தில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (30) காலை 8:45 மணியளவில் ராகம ரயில் கடவை ஊடாக செல்ல முற்பட்ட 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

ராகம விஹார மாவத்தையில் வசிக்கும் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இந்த விபத்தின் பின்னர் ராகம துடுவெகெதர பிரதேசத்தில் மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என்பதுடன் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.