பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலுக்கு வாய்ப்பில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

OruvanOruvan

Ranil Wickremesinghe - President

சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்பு பணியானது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமானது எனவும், அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு தடையாக இருக்காது எனவும், அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துமாறு சில தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துமாறு சில தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது அதற்கு சாத்தியமில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.