மட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற பாரிய விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை

OruvanOruvan

Accident In Batticalo

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலேயே, இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி வர்த்தக நிலையங்களை உடைத்துக்கொண்டு விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

OruvanOruvan

விபத்தில் சாரதி உட்பட பலர் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.