”நானே வேட்பாளர் - முதலில் நடைபெற போவது ஜனாதிபதித் தேர்தல்தான்”: பசிலின் வாயை அடைத்த ரணில்

OruvanOruvan

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் சந்தித்து தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.

என்றாலும், எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும், தாம் உருவாக்கும் கூட்டணியின் வேட்பாளராக தானே களமிறங்குவேன் என்றும் ரணில் விக்ரமசிங்க, பசிலிடம் எடுத்துரைத்துள்ளார்.

அதனால் ரணில் விக்ரமசிங்கவுடனான பசிலின் சந்திப்புகள் தோல்வியில் அல்லது இணக்கப்பாடின்றி முடிவடைகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கட்சியின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்தால் முதலில் பொதுத் தேர்தலையே நடத்த வேண்டும் என பசில் ராஜபக்சவிடம் இந்த சந்திப்பில் எடுத்துரைத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

”மக்கள் ஜனாதிபதித் தேர்தலையே கோருவதாகவும், வீழ்ந்த நாட்டை தாம் கட்டியெழுப்பிள்ளதால் மக்கள் தம்மைப் புறக்கணிப்பார்கள் என ரணில் விக்ரமசிங்க, பசிலிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது..