ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து மூவர் நீக்கம் - உடனடியாக புதியவர்கள் நியமனம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் துமிந்த, லசந்த, மஹிந்த

OruvanOruvan

Sri Lanka Freedom Party

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உயர் பதவிகளை வகித்த மூவர் குறித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டத்தில் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஹெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பொருளாதார பதவியில் இருந்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதவிநீக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு உடனடியாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக கே.பி.குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் புதிய பொருளாளராக மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிரேஷ்ட உப தலைவராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருடன் தானும் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.