நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காதோரிடம் ஆலோசிக்கும் அரசாங்கம்: துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை

OruvanOruvan

பொதுத் தேர்தலை நடாத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதா என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களிடம் அரசாங்கம் ஆலோசிப்பதாக சட்டத்தரணி ஏமக சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறானவர்களிடம் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் மக்கள் ஆணையால் தேர்வானவர்களிடம் ஆலாசிக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தானது என துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி நிர்ணயம் செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அரசியலமைப்பிற்கமையவே ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாது அரசியலைம்பு மீறப்படுவது பாரதூரமான குற்றம் எனவும் குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு காரணமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஆட்சி மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சி இல்லையென முன்னாள் தேர்தல்கள் ஆணையாளார் நாயகம் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

மக்களின் இறையாண்மை அதிகாரமான வாக்குரிமையை ஒருபோதும் மீறமுடியாது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.