சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News Updates 31.03.2024

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்பட உள்ளன.

யாழில் கார்த்திகைப்பூ இல்ல அலங்காரம் - விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ, செயின் பிளக் என்பன இல்ல அலங்காரங்களாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இது தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸாரால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

OruvanOruvan

https://fb.watch/r91cqeECT4/மரணவீட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம்;ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் மரணவீடு ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ். போதான வதை்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகதாவ தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி-ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் - ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

எமது மக்கள் எதிர்கொள்ளும் பாரிய துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை. இந் நாட்டில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து சரியாக 5 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட போதிலும் நாங்கள் இதுவரை உண்மையை அறிய முடியவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என தெரிந்தால் தான் நாம் முடிவை அறிவிக்கலாம் - சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் யார் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பின்னரே , தமிழரசு கட்சி அது தொடர்பில் கலந்துரையாடி எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என தீர்மானிக்க முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்