இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் அனுர: கனடாவில் வெளியான செய்தி

OruvanOruvan

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஆதரவை திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் இறுதியில் கடனாவுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு மக்கள் சந்திப்புகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது புலம்பெயர்ந்து வாழும் சிங்களம் மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அவர், இலங்கையில் உள்ள தமது உறவுகளை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க கோரிக்கைகளை விடுக்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

அனுரவின் கனடா பயணம் தொடர்பில் அங்குள்ள பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தது.

கனடாவின் உள்ளூர் பத்திரிகையொன்று அனுர திஸாநாயக்கவை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு ஆதரவைப் பெறுவதற்காக அனுரகுமார திஸாநாயக்க கனடாவிற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது..