ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார்: கூட்டணிப் பேச்சுகள் ஆரம்பம் - சம்பிக்க அறிவிப்பு

OruvanOruvan

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் கூட்டணியை உருவாக்க தலையிடுவேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

”பெப்ரவரி 14-ம் திகதி, “நாட்டுக்காக ஒன்றிணையும் செயல்பாடு” திட்டத்தை நாம் முன்தோம். புதிய அரசியல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கூட்டணியின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது மாத்திரம் அல்ல. இது நாட்டைக் கட்டியெழுப்பு திட்டத்தை மையமாக கொண்டே உருவாக்கப்படும்.

உருவாக்கப்படும் கூட்டணியில் தேர்தல்களில் யார் நிற்க வேண்டிய பிரதிநிதிகள் என நியமிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார்.

கூட்டணியின் சார்பில் வேறு ஒருவரை முன்னிறுத்தினாலும் அவரின் வெற்றிக்காக பாடுபடுவோம்.” எனவும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுவரும் கூட்டணி தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

இந்தக் கூட்டணியில் சம்பிக்க இடம்பெறுவரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புகளையும் அவர் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.