ஜனாதிபதித் தேர்தில் ரணிலுக்கு ஆதரவு - ஜீவன்: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

30.03.2024 Local Short stories

ஜனாதிபதித் தேர்தில் ரணிலுக்கு ஆதரவு - ஜீவன்

பெருந்தோட்டத்தில் தற்போது நிலவும் மூன்று முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த யோசனைகளுக்கு தீர்வு வழங்க அவர் இணக்கம் தெரிவித்ததால், ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி அவருக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ராகமையில் தடுப்பூசி போடப்பட்ட நோயாளி உயிரிழப்பு - விசாரணைகள் ஆரம்பம்

ராகம வைத்தியசாலையில் கோ-அமோக்ஸிக்லாவ் தடுப்பூசி போடப்பட்டதையடுத்து நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரை சந்திப்பதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு

மீனவ பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தமிழக முதலமைச்சரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த பாலத்திற்கான காப்பீடு இழப்பீடு தொகை அறிவிப்பு

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்துள்ள நிலையில் , பாலத்தை புணரமைப்பதற்கு 60 மில்லியன் டொலர் மத்திய அரசின் அவசர நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டு இழப்பீடு3 பில்லியன் டொலரைத் தாண்டும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

OruvanOruvan

முன்கூட்டிய பொதுத் தேர்தல் அரசியல் அமைதியின்மையை உருவாக்கும்

முன்கூட்டிய பொதுத் தேர்தல் அரசியல் அமைதியின்மையை உருவாக்கும். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதன் இறுதி முடிவுகள் தொங்கு நாடாளுமன்றமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்தார்.

அனுரவை ஜனாதிபதியாக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவை நாட்டின் ஜனாதிபதியாக்க மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடையே வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : எச்சரித்த வைத்திய நிபுணர்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில் சிறிய கொப்புளங்கள் ஏற்படலாம் எனவும், சிறுவர்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் கோரியுள்ளார்.

வருடத்தின் முதல் பூரண சூரிய கிரகணம்

இவ்வருடத்தின் முதல் பூரண சூரிய கிரகணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதிக்கு அமைந்துள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது வட அமெரிக்காவில் முழுமையாக தென்படும் எனவும் இதன் பின்னர் எதிர்வரும் 2044 ஆம் ஆண்டிலேயே வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த, லசந்த, மஹிந்த ஆகியோர் சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டத்தில் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கட்சியின் மத்திய குழு பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக செயற்குழு பிரதிநிதிகள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குயின் விக்டோரியா கப்பல்

குயின் விக்டோரியா எனும் சொகுசு பயணிகள் கப்பல் இன்று (30) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து 1812 பயணிகள் மற்றும் 964 பணியாளர்களுடன் வருகைதந்த இந்த கப்பல் இன்று இரவு மொரிசியஸ் பயணிக்கவுள்ளது.

முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை

கோழி இறைச்சி, மற்றும் முட்டைகளை தட்டுப்பாடின்றி பண்டிகைக் காலத்தில் வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியை 1000 ரூபாவுக்கு விற்க முடியுமென அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் விஜயதாச ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு பல்வேறு தரப்பினரும் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராமரிப்பு பணிகள் ஆரம்பம் - 25 இரயில்களின் சேவை இரத்து

கொழும்பு மாநகர சபையினால் கரையோர மார்க்கத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (30) 25 இரயில்களின் சேவை இரத்து செய்யப்படுவதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கரையோர மார்க்கத்தில் நாளை (31) இரயில் போக்குவரத்து நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தால் போராட்டம் வெடிக்கும்

நாடெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முதலில் பசில் கோருகிறார்

படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால் எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பாகும்

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகள் விளையாட்டுக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பதை தடுக்க முடியுமானால் சிறந்தது என்றும் கூறினார்.