பெரிய வெள்ளியை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: விசேட அதிரடிப்படையினரும் கலத்தில்

OruvanOruvan

இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற நாளான இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் அந்தோனியர் தேவாலயம்

மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

சிலுவைப்பாதையானது தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

அந்தோனியர் தேவாலயத்தின் அருட்தந்தை அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற சிலுவைப் பாதையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் பங்கு கொண்டிருந்தனர்.

விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவை வழிபாடுகள்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் இன்றைய தினம் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

OruvanOruvan

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (29) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.

மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.

திருச்சிலுவைப்பாதையானது காலை குருக்கள்மடம் புனித பிரான்சிஸ்அசீசியார் தேவாலயத்திலிருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு திருத்தலத்தினை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

OruvanOruvan