வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

29.03.2024 North and East News

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை

“நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -SMART சூரன்களோடு” எனும் தொணிப்பொருளிலான மக்கள் நடமாடும் சேவை வவுனியா காமினிமகாவித்தியால விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் ருமேனியா,மத்திய கிழக்கு நாடுகள்,இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி திறப்பு

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

OruvanOruvan

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட இளைஞர் கைது

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

OruvanOruvan