ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம்

OruvanOruvan

galagoda athe gnansara thero

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முறைப்­பாடு

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் 2022 செப்­டம்பர் 20 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே முன்­னி­லையில் இவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிஇ முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பாராளுமன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததன் அடிப்படையில் விசாரணைகளை மையப்­ப­டுத்திஇ மேல் நீதிமன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு அது கையளிக்கப்ட்ட நிலை­யி­லேயே குறித்த வ­ழக்கு, விசா­ரணை செய்­யப்­பட்­டது.

இதன்­போது, கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்­சய ஆரி­ய­தாச ஆஜ­ரானார்.

கூர­கல பெளத்த புரா­தன சின்­னங்­களை முஸ்­லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் கேவ­ல­மான வச­னங்­களைக் கொண்டு இஸ்லாமியர்கள் ஏக இறை­வ­னாக வழி படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்டியதாகவும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

OruvanOruvan

பகி­ரங்க மன்­னிப்பு கேட்க விரும்­பு­வ­தாக தெரிவித்த ஞானசார

நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செய­லணி முன்னாள் தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர்இ அவை குறித்து தொட­ரப்­பட்­டுள்ள மேல் நீதி­மன்ற வழக்கில் பகி­ரங்க மன்­னிப்பு கேட்க விரும்­பு­வ­தாக அறிவித்திருந்தார்.