விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டு: முன்னாள் போராளி ஒருவர் திடீரென கைது

OruvanOruvan

Arrested

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் போராளில் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் பதிவொன்று தொடர்பில் குறித்த முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த 12 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் உரிய தினத்தின் முன்னிலையாகியிருக்கவில்லை. இதனையடுத்து அவருக்கு மீளவும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் நேற்றைய தினம் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி இருந்தார்.

இதன் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

எவ்வாறாயினும், குறித்த போராளி இதற்கு முன்னரும் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பர் 2023 இல், மாவீரர் நாளுக்கு எதிராக ஒரு கண்காட்சியை நடத்தியதற்காக இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை விசாரித்தமை காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் புலிகளால் கொல்லப்பட்டதாகக் கூறும் நபர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, உளவுத்துறை அதிகாரிகளிடம், யாருக்காக வேலை செய்கிறீர்கள், எதற்காக இந்தக் கண்காட்சியை நடத்துகிறீர்கள் என்று குறித்த முன்னாள் போராளி கேட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் அந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.