அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 17,000 ரூபாவிற்கு மேல் தேவை: அதிக செலவினைக் கொண்ட மாவட்ட தரவரிசையில் கொழும்பு

OruvanOruvan

Colombo ranks as the district with the highest expenditure

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா தேவைப்படுகின்றது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணை தரவுகளுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான இந்த தொகை தேசிய மட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மாவட்டங்கள் தோறும் இந்த தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவாக 18,350 ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவினைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு அமைந்துள்ளதுடன் குறைந்த செலவினைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை அமையப்பெற்றுள்ளது.

மொனராகலையில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு 16,268 ரூபா தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.