பட்டாசுகள் கொள்வனவு செய்ய போகின்றீர்களா?: புத்தாண்டு காலத்தில் அவதானம்..!

OruvanOruvan

Are you going to buy crackers?

பண்டிகை என்றாலே சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பட்டாசு வெடிப்பதுதான் பேரானந்தம். ஆனால், பட்டாசு வெடிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு தற்போது வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும், சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்களே இந்த விபத்துகளுக்கு முகம் கொடுப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கள் நிறைந்த காலம்

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலம் என்பது விபத்துக்கள் நிறைந்த காலம் என்பதால் புத்தாண்டு விளையாட்டு, வாகனம் ஓட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்றவற்றின் போது உங்கள் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கணக்கெடுப்பு தரவுகளின்படி, பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் கை மற்றும் விரல்களில் ஏற்படுவதுடன், விபத்துக்கள் கண்கள் மற்றும் முகம் மற்றும் தலையில் 17% விபத்துக்கள் ஏற்படுவதாக தெரியவருகின்றது.

OruvanOruvan

அவதானம் தேவை

பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.

வீட்டில் பெரியவர்களின் துணையில்லாமல் பட்டாசுகளை வெடிக்க சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது. வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவது பாதுகாப்பானதாகும்.

பாதுகாப்பு அணுகுமுறைகள்

  • பாத்திரங்கள், பாட்டீல்கள் அல்லது குறுகிய இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

  • பட்டாசு வெடிக்கும் போது, வெடிக்க வேண்டிய பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது.

  • வெப்பமான இடங்களில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது.

  • பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால், அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது.

  • பெரிய வகை பட்டாசுகளை கையில் வைத்தபடி பற்ற வைக்கக் கூடாது.

  • நமக்கும் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரொக்கெட் வகை பட்டாசுகளை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

  • வீண் பெருமைக்காக பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது.

  • பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துக்கொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால் அதன்மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.

  • சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகளை கவனத்தில்கொண்டு வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்க்க வேண்டும்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்போம், பண்டிகையை இனிமையாக்குவோம்!🎉✨

OruvanOruvan