ரணிலேயே பொருத்தமான வேட்பாளர்: நாமல் போட்டியிட இன்னும் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்

OruvanOruvan

”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக உழைக்க வேண்டும். அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். வேறு யாராவது வெற்றி பெற்றால் அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். அப்போது நாடு அராஜகத்திற்குள் தள்ளப்படாது.”

- இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

”முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்க மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடைபெற்றால் எவராலும் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியாது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அராஜகங்கள் போன்று இலங்கையிலும் அராஜகங்கள் ஏற்படலாம் என்பதால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதே தீர்வாக அமையும்.

நாட்டின் நலனுக்காக நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். முதலில் நாடுதான் முக்கியம். இரண்டாவதே கட்சி.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சென்றால் ஸ்திரமற்ற அரசாங்கமே அமையும். அதனால் நாட்டுக்கே பாதிப்பு. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுபவருக்கு ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க இடமளிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தற்போது பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லை. இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும்.” என்றார்.