'போரில் சேர வேண்டாம் என்று நான் அவரிடம் கெஞ்சினேன்': ரஷ்ய போரில் இலங்கை வீரரின் அவல நிலை!

OruvanOruvan

உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் - ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அல்ஜசீராவுக்கு ரஷ்ய இராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்தால், தனது பதவியை விட்டு விலகுவதாக இலங்கை இராணுவ வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரஷ்யாவில் வாழ விரும்பும் இலங்கையர்கள்

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் கூற்றுப்படி, உக்ரேனில் இலங்கையர்கள் இறந்த போதிலும், பலர் ரஷ்யாவில் இருப்பதற்கு விரும்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்தால், தனது பதவியை விட்டு விலகுவது குறித்து பரிசீலிப்பதாக பணியில் இருக்கும் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் எனவும் அடிக்கோடிட்டு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

இலங்கையின் முக்கிய அரசியல் பின்னணியால் ஏற்பட்ட சிக்கல்

கோட்டாபய மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரும் கடந்த நவம்பர் மாதம், நாட்டின் உச்ச நீதிமன்றத்தால், தங்கள் நாட்டைப் பாதித்துள்ள நிதி நிர்வாகச் சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இது முழு நாட்டையும் குறிப்பாக 22 மில்லியன் மக்களையும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படையச் செய்து பணவீக்கத்தை ஏற்படுத்திய காலமாகும்.

இதனால் சாதாரண மக்கள் மட்டுமல்லாது இராணுவ வீரர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் பலர் யுக்ரைன் - ரஷ்ய போரில் இணைந்து கொண்டு ஆயுதமேந்திய போர்வீரர்களாக மாறினர்.

டிசம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகேவும் ஒருவர்.

மேலும், இலங்கை இராணுவத்தின் ஒன்பது வருட அனுபவமிக்க நிபுனா சில்வாவும் ரஷ்யாவிற்கு விசுவாசமாக சத்தியம் செய்ய வறுமை தூண்டியது.

'போரில் சேர வேண்டாம் என்று நான் அவரிடம் கெஞ்சினேன்'

OruvanOruvan

27 வயதான நிபுன சில்வா, தனது இளம் குடும்பத்தை தென்னிலங்கையில் விட்டுவிட்டு உக்ரேனில் ரஷ்யாவுக்காக போராடி மடிவதற்கு வழிவகுத்த முடிவுகள் சமகால இலங்கையின் ஒரு பெரிய கதையைச் சொல்கிறது.

நிபுன சில்வாவை “போரில் சேர வேண்டாம் என்று நான் அவரிடம் கெஞ்சினேன்“ எனவும் இலங்கை இராணுவ வீரர் அல்ஜசீராவிடம் கூறியுள்ளார்.

நிபுனசில்வா, தனது குடும்பத்திற்காக ஒரு வீட்டைக் கட்டுவதற்காக 1.9 மில்லியன் இலங்கை ரூபாவை (சுமார் $6,300) கடனாகப் பெற்றுள்ளார்.

மேலும், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் இராணுவத்தில் இருந்து தனது பயனுள்ள வருமானத்தில் மற்ற செலவுகளை ஈடுகட்டவும் அவர் சிரமப்படுகிறார். அதாவது, மாதம் 28,000 ரூபாய் ($92) எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.