ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல்: அமைச்சர்களுக்கு தெரியப்படுத்திய ரணில்
ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் நடத்தப்படும் என இலங்கையில் கடந்த சில நாட்களாக வாதப்பிரதிவாதங்கள் அரசியல் மேடைகளில் இடம்பெற்று வருகின்றன.
பொதுத் தேர்தலை நடத்துவதன் ஊடாகவே தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும் என பொதுஜன பெரமுன கருதுவடன், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
என்றாலும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து அமைச்சர்களுடன் ரணில் கலந்துரையாடியுள்ளார்.
அதன் போது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்த சாகல தலைமையிலான குழுவொன்றும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.