வெடுக்குநாறிமலையில் பொலிஸாரின் அத்துமீறல்: மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மகஜர்

OruvanOruvan

Colombo Human Rights Council

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்டவர்கள் அண்மையில் விடுதலையாகியுள்ள நிலையில், தற்பேது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் பொலிஸாருக்கு, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியின் செயற்பாடுகள் துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பொலிஸார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இடையூறுகள் இன்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.