நீர்கொழும்பில் முற்றுகையிடப்பட்ட மசாஜ் நிலையங்கள்: நூறிற்கும் மேற்பட்ட பெண்கள் கைது

OruvanOruvan

Massage parlors in Negombo have been closed

நீர்கொழும்பில் மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கி வந்த 53 விபச்சார விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வாரம் முதல் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, முறையான அனுமதியின்றி மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதிகள் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அந்த நிலையங்களில் பணிபுரிந்த 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்டபடுத்தப்பட்ட நிலையில் இருவருக்கு எச்.ஐ.வி.தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 15 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நிலையங்களில் பணிபுரிந்த 8 ஆண்களும் 137 பெண்களும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.