வவுனியாவில் கோர விபத்து: முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி

OruvanOruvan

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

டிப்பர் வாகனமும், கெப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.