கடுவெலயில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Local News

கடுவெலயில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கொழும்பு கடுவெல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று பிற்பகல் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலைச்சுற்றி இரத்தக் கறைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொத்தலாவலையைச் சேர்ந்த 2 பிள்கைளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அலவ்வ , மா ஓயாவில் நீராடச் சென்ற ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர்கள் பொல்கஹவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் 09ச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை - மருதானை வீதியில் கடும் வாகன நெரிசல்

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பொரளையிலிருந்து மருதானை வரையிலான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நானுஓயா டெஸ்போட்டில் பொது மக்களுக்களுக்கு நடமாடும் சேவை

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தலைமையில் ஏற்பாட்டில் 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று புதன்கிழமை (27) நானுஓயா டெஸ்போட் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சீன ஜனாதிபதியை சந்தித்த பிரதமர்

சீனாவுக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

OruvanOruvan

தொடர்ச்சியாக குறையும் டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினமும் 300 ரூபாவுக்கும் குறைவான நிலையில் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று (மார்ச் 27) முறையே 296.45 ரூபாவாகவும், 306.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

OruvanOruvan

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்கள் கைது: நீதிமன்று பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கொழும்பில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கராவே ஜினரத்ன தேரர் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கெஹலியவின் மகள் சமித்ரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று (27) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

தபால் நிலையங்களில் வாகன அபராதம் செலுத்தும் வசதி

நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய சில தபால் நிலையங்கள் மூலம் இரவு வேளைகளில் வாகன அபராதம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

27 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (26) வெலி ஓயா நிகவெவ பிரதேசத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் 27 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளுக்கு நாப்கின் வவுச்சர்கள்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சுமார் 800,000 பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலால் வரி திருத்தம் குறித்து அறிவிக்கப்படவில்லை - கலால் ஆணையாளர்

இலங்கை கலால் திணைக்களத்திற்கு கலால் வரி திருத்தம் குறித்து அறிவிக்கப்படவில்லை அல்லது அத்தகைய திருத்தம் தொடர்பாக கலால் திணைக்களத்திற்கு எந்த அறிவிப்பும் அல்லது ஆலோசனையும் வழங்கப்படவில்லை என கலால் ஆணையாளர் (வருவாய் நடவடிக்கைகள்) சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழு கூட்டம் இன்று

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழு கூட்டம் இன்று (27) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் மற்றும் உள்விவகாரங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக கருதப்படும் புதிய ஜேர்மன் - இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழப்பு

நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் கொள்ளையிட முற்சித்த 28 வயதான நபர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

நோர்வூட் பகுதியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

நோர்வூட் வென்ச்சர் தோட்டப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உழவு இயந்திரத்தை கழுவச் சென்றவர் உயிரிழப்பு

வெலிகந்த, மகிந்தகம பிரதேசத்தில் நீர் தெளிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் உழவு இயந்திரத்தை கழுவச் சென்ற நபர், நீர் தெளிக்கும் இயந்திரத்தின் மின்கம்பியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

படலகொட குளத்தில் நீராடச் சென்றவர் உயிரிழப்பு

குருநாகல், கொகரெல்ல பிரதேசத்தில் சுற்றுலாவிற்கு வந்த குழுவொன்று, படலகொட குளத்தில் குளிப்பதற்குச் சென்ற போது, அதில் ​​ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 3,000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடைகளை பரிசோதிக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி

நாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 28 இலட்சம் குடும்பங்களுக்கும் இரண்டு கட்டங்களாக இதனை வழங்க உள்ளதாகவும் ஏப்ரல் மாதம் 10 கிலோவும் மே மாதம் 10 கிலோ வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச’சர் குறிப்பிட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் மீதான கொலை முயற்சி - விரிவான விசாரணைகளைக்கு உத்தரவு

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதுருகிரியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

புலம்பெயர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'முதுவா' என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவுக்கு சொந்தமான அதுருகிரியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (27) அதிகாலை சில குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவதற்கு இடமளிக்க கூடாது - ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டின் டாட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவதற்கு இடமளிக்க கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அன்றைய தினம் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இன்று நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டை நீதவானை கொலை செய்ய முயற்சி - உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்க உளவாளி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் சாத்தியக்கூறுகளை ஆராயும் இந்தியா

இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கையின் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு தொடர்பான மாநாட்டை நேற்றைய தினம் (26) செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. மாநாடு மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.