யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News Updates 26.03.2024

யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாட்டில், சர்வதேச மகளிர் தினம் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை “அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” என்னும் தொனிப்பொருளில் மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்ளூர் பெண் முயற்சியாளர்களின் விற்பனைக்கூடங்கள் விருந்தினர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

OruvanOruvan

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதான நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் காரில் சென்ற நால்வர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் மதுபோதையில் சென்ற நால்வர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

OruvanOruvan

OruvanOruvan

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்

யாழ்ப்பாணம் A9 வீதி, மீசாலைப் பகுதியில் சொகுசு பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேராவில் பாடசாலை தினத்தில் மாணவர்களின் கவனயீர்ப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் தமிழ் வித்தியாலய 27வது ஆண்டு பாடசாலை தினத்தினை முன்னிட்டு நேற்று மாணவர்களால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் இளம் சமூகத்தினர் குறிப்பாக கல்வி கற்கும் மாணவர்கள் போதையாலும்,சமூக சீர்கேடுகளாலும் அழிந்துகொண்டு செல்கின்றார்கள் இவற்றில் இருந்து மாணவர்களை மீட்டு கல்வியினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

பருத்தித்துறையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஹயஸ் - பெண் படுகாயம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த துன்னாலை மேற்கை சேர்ந்த குமரேசமூர்த்தி வனிதா (வயது 51) எனும் ஷ பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு தப்பி சென்றுள்ளதுடன், காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீன்பிடிக்க சென்ற இளைஞனுக்கு நேர்த்த பரிதாபம்

வாழைச்சேனை - புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று (25) மாலை உயிரிழந்தவரின் தந்தை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை துண்டுப்பிரசுரம் ஊடாக வெளியிட்டு நடைபெற்று வருகின்றது.

மதுபோதையில் சென்ற குழு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான இன்று(25) ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.