யாழ்ப்பாணத்தில் கடும் மழை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North and East News

யாழ்ப்பாணத்தில் கடும் மழை

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் மதியம் வரையில் கடும் மழை பொழிந்தது.

OruvanOruvan

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு

அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

திருக்கோவில் ஆதார வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்துக்கு வைத்தியர்கள், சாய்தமருது, காரைதீவு, ஒலுவில், அட்டப்பளம், நிந்தவூர் உள்ளிட்ட வைத்தயசாலை வைத்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போராளி அரவிந்தன் சி. ஐ. டியால் கைது

முன்னாள் போராளியும் போராளியும் நலன்புரி சங்க தலைவருமான செ. அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் செல்லாத நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு முயற்சி - யாழ் மாவட்ட அமைப்பாளர் குற்றச்சாட்டு

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்ற நிலையில், அதன் வெற்றியை தடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட எட்டு பேரில் ஆறு பேரினால் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதுகாரியையும் நேரில் சந்தித்து வெடுக்குநாறி மலை விடயத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.