மைத்திரி வழங்கிய வாக்குமூலம்: சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கிடைக்கபெற்ற அறிக்கை

OruvanOruvan

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தை மீளாய்வு செய்த பின் உண்மைகளை நீதிமன்றில் அறிவிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருகிறது.

இது தொடர்பான அறிக்கை இன்று (26) மாலை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வாக்குமூலம் தொடர்பான மீளாய்வுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 22ஆம் திகதி தெரிவித்திருந்த நிலையில் அவரிடம் நேற்று திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தை பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.