சொந்த நாட்டில் வேலை செய்ய நினைப்பது எம் தவாறா?: யாழ்.பல்கலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

OruvanOruvan

Jaffna Protest

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

OruvanOruvan

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

OruvanOruvan

போராட்டத்தின் போது, சொந்த நாட்டில் வேலை செய்ய நினைப்பது தவாறா? நான்கு வருட தாதியியல் படிப்பு சொந்த செலவில் சூனியமா? எமது திறமைகளை வீணடிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்ம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

இதன்போது இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.