பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டுவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

OruvanOruvan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறந்தது.

தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கறை காட்டுவதில்லை.

ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதாக கூறினாலும் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

ஏனென்றால், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடுவதில் அவருக்கு விருப்பமில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபாடு காட்டாமை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது”. எனவும் அவர் கூறியுள்ளார்.