புதுக்குடியிருப்பில் தாக்குதல் சம்பவம்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North -east news updates 25.03.2024

புதுக்குடியிருப்பில் தாக்குதல் சம்பவம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றவர்கள் மீது காரில் நால்வர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு

பிரான்ஸில் இருந்து திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் கஞ்சாவுடன் கைதான கடற்படையினரிடம் 48 மணி நேரம் விசாரணை

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த இருவரையும் , கஞ்சாவை வாங்க வந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யவுள்ளனர்.

OruvanOruvan

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் நினைவு தினம் அனுஸ்டிப்பு

வவுனியா சூசைப்பிள்ளையார்குள சந்தியில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலையடியில் கம்பன் நினைவுதினம் இன்று காலை 9.00 மணியளவில் நகரசபையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர சகித புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை ,நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெற்று வருகிறது. நேற்று காலை முதல் ஆலயத்திலே விசேட பூஜை வழிபாடுகளும் அடியார்களுடைய நேர்த்திக்கடங்களும் மிகச் சிறப்பாக இடம் பெற்று வந்த நிலையில், விசேட பொங்கல் வழிபாடுகளும் இடம் பெறவுள்ளது.