மோசமான போக்குவரத்து நெரிசலுடைய நகரங்களின் பட்டியலில் கொழும்பு: 'வேல்ட் ஒப் ஸ்டெடிஸ்டிக்ஸ்' வெளியிட்ட தகவல்

OruvanOruvan

உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

'வேல்ட் ஒப் ஸ்டெடிஸ்டிக்ஸ்' நடத்திய ஆய்வின் மூலமே இது கண்டறியப்படுட்டுள்ளது.

இலங்கையை பொருத்தவரையில் கொழும்பு மாவட்டம் மிகவும் பரபரப்பான ஒரு மாவட்டமாகும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்தநேரத்தில் பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் இருந்து மட்டும் சுமார் 974 கிலோ கார்பன் மாசு வெளியேற்றப்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

OruvanOruvan

போக்குவரத்து பாதிப்படைய காரணம்

தற்போது கொழும்பை பொருத்தவரை நகரமயமாதலின் காரணமாகவே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள யாசகர்களின் எண்ணிக்கையும் இதற்கு காரணம் எனலாம்.

போக்குவரத்து பொலிஸாரின் சரியான நிர்வாகம்மின்மை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் வருகை, சீரான சமிக்ஞை பிரயோகமின்மை, போக்குவரத்து விதிமுறை மீறல்,மழை காலத்தில் வெள்ளம், வடிகாலமைப்பு சீறின்மை என்பவற்றை பிரதானமாக கூறலாம்.