இலங்கையே சிறந்த உதாரணம்: ஜனாதிபதி ரணிலுக்கு பெலாரஸ் ஆட்சி தலைவர் வாழ்த்து

OruvanOruvan

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை சிறந்த உதாரணம் என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுறள்ளார்.

“இன்று, இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த முயற்சியில் நீங்கள் எப்போதும் பெலாரஸ் குடியரசின் ஆதரவை நம்பலாம்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பெலாரஸ்ய-இலங்கை ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வர முடியும் என்றும் தான் உறுதியாக நம்புவதாகவும்” அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

பெலாரஸ், இயந்திர பொறியியல், உலோகம் மற்றும் மரச் செயலாக்கம், மின்சார சக்தி, மருந்துப் பொருட்கள் போன்ற துறைகளில் திறன்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் விவசாய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.