களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ செயற்பாட்டாளர் கைது: இன்றைய முக்கிய உள்நாட்டு செய்திகள்

OruvanOruvan

களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ செயற்பாட்டாளர் கைது

களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ செயற்பாட்டாளரான சஞ்ஜய ஹெட்டிமுல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பகிடிவதை சம்பவங்கள் மற்றும் மாணவர்களை தடுத்து வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு

கடவத்தை பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைக்குண்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

OruvanOruvan

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி, இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 307 ரூபா 33 சதமாக பதிவாகியுள்ளது.

OruvanOruvan

விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை தனது தாய் மற்றும் மூத்த சகோதரரிடம் காட்டிவிட்டு வீடு திரும்பும் போது வேன் மற்றும் கெப் ரக வாகனதுடன் மோதியதில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹெனாவத்தையைச் சேர்ந்த மஹாலியனகே சஹான் திமந்த பெரேரா என்ற 18 வயதுடைய பாடசாலை மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பதவியுயர்வு

நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் விசாரணைகளை நிறைவு செய்து முடிவுகளை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி

நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் முயற்சியில் இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக அமைச்சர்கள் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்க தீர்மானம்

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்காக அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதன்படி,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ கிராம் அரிசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மாட்டுடன் மோதி புகையிரதம் விபத்து

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்றைய தினம் புகையிரதம் ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் மதுபான விலையில் மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் சர்சைக்குரிய கருத்து - சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.குண்டுத் தாக்குதல்களை நடத்திவர்களை எனக்குத் தெரியும்” என மைத்திரிபால சிறிசேன கடந்த 22ஆம் திகதி ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேயிலை கொழுந்து உற்பத்தி 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கான அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தேயிலை ஏற்றுமதி 42 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சுற்றிவளைப்பில் 12 பேர் கைது

மேல் மற்றும் தென் மாகாணங்களில் செயற்படுத்தப்படும் விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வருகைத் தரும் பெரிய வெங்காய கப்பல்

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சீனாவிலிருந்து 3000 மெற்றிக் டொன் பெரிய வெங்காயத்தை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இம்முறை எரிபொருள் விலையில் குறைவேற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் நாட்டின் 53ஆவது குடியரசு தினம் - வாழ்த்துகூறிய இலங்கை

பங்களாதேஷ் நாட்டின் 53ஆவது குடியரசு தின தினத்தை முன்னிட்டு இலங்கை அரசாங்கம்தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 17 வகை மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத பல வகையான மருந்துகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளுக்கான மாற்று மருந்துகள் இருப்பதாகவும் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் துப்பாக்கி மாயம்

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி காணாமல் போனது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் கொழும்புக்கு அழைக்கும் மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களும், எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு மைத்ரிபால சிறிசேனவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல் தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எட்டப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பண்டிகைக்காலத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை-மக்களுக்கு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலங்களில் காலாவதியாகியுள்ள பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு விற்பனை இடம்பெறலாம் எனவே பல்வேறு பொருட்கள் விற்பனை நிலையங்களினால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

கொட்டாவ - ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவையில் இருந்து மகும்புர நோக்கிச் சென்ற வேன் வலதுபுறம் திரும்பும் போது மகும்பூரிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டதினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டி வீதங்கள் குறைப்பு - மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயசபை நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைத்துள்ளது. ஒவ்வொன்றும் 50 அடிப்படை புள்ளிகளால் (bps) குறைப்பதற்கான முடிவை மத்திய வங்கி அறிவித்துள்ளது. புதிய விகிதங்கள் SDFR க்கு 8.50 சதவீதமாகவும், SLFR க்கு 9.50 சதவீதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இணைய அச்சுறுத்தல் தொடர்பில் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யலாம்

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்று பல மாவட்டங்களில் அதிகமான வெப்பம் நிலவும்

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார்,வவுனியா,அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

சவீந்திர சில்வா கென்யா விஜயம்

இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவீந்திர சில்வா கென்யாவின் பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.கென்ய பாதுகாப்பு பிரதானி ஜெனரல் பிரான்சிஸ் ஓகோல்லவின் அழைப்பின் பேரில் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரசாங்க ஜோதிட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுபகாரியங்களை பின்பற்றுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளது.