வடக்கில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்: தன்னார்வப் படையொன்றை நிறுவும் அமைச்சு

OruvanOruvan

நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோத இந்திய மீன்பிடி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக கடல்சார் தன்னார்வப் படையொன்றை நிறுவ கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான அனுமதியைப் பெறுவதற்காக அண்மையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

வடமாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மீனவ சங்கங்களின் ஊடாக மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தன்னார்வ இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அமைச்சரின் தலையீட்டை அடுத்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர்.

யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி முதல் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.