மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை: உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு

OruvanOruvan

Shortage of human papilloma vaccines

இலங்கையில் மனித பாப்பிலோமா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக பெண்பிள்ளைகளுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

சுமார் 8 மாதங்களாக குறித்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் இந்த தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல மாதங்களாகவே இந்த தடுப்பூசிகளுக்கு உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என

சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.