டொலர் பெறுமதி குறைவடையும் சாத்தியம்: அந்நிய செலாவணி அதிகரிப்பு

OruvanOruvan

Dollar rate down

எதிர்வரும் காலங்களில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியின் அளவு கணிசமாக அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 299 இலங்கை ரூபாவினை செலுத்த வேண்டியுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதன் பெறுமதி 250 முதல் 260 ரூபா வரையில் குறைவடையும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன்களும் மானியங்களும் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு மற்றொரு காரணமாகும்.

இருப்பினும், எதிர்காலத்தில் இலங்கைக்கு கிடைக்கும் டொலரின் அளவு குறைவடையும் பட்சத்தில் ரூபாவின் பெறுமதி வீழச்சியடையும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.