மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பல் கைது: இன்றைய முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story 24.03.2024

மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பல் கைது

நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்களை திருடி, அதன் பாகங்களை பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, அவர்களிடம் இருந்த 116 மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவிலிருந்து டாக்காவுக்கு நேரடி விமான சேவை

இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான FitsAir எதிர்வரும் அடுத்த மாதம் 16 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.இதற்கான ஒரு வழி கட்டணமாக 74,600 ரூபா அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாரம் இருமுறை விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு 200 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகைத் தரும் பொது மக்களின் பாதுகாப்புக்காக 200க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேங்காய் விலையில் மாற்றம்

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 அல்லது 300 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , எதிர்வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு நாளை முதல் உணவு வழங்க நடவடிக்கை

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நாளை முதல் உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை உணவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபாவை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்துள்ளது.

OruvanOruvan

OruvanOruvan

பால் மா விலையை இன்று நள்ளிரவு முதல் குறைக்கத் தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவால் குறைப்படவுள்ளதுடன் 400 கிராம் கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச தனிநபர் விபத்துக் காப்புறுதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் 2000 கட்சி உறுப்பினர்களுக்கான இலவச தனிநபர் விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 கட்சி உறுப்பினர்களுக்கு வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளரால் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளன.

மைத்திரியிடம் வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களம் நாளை (25) அவரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் காடழிப்புகள்

காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாரிய சுற்றாடல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இம்மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 57 காடழிப்பு நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்

ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் முட்புதர் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் நிமித்தம் இம்மாத இறுதிக்குள் இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

இலங்கையில் இருந்து சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலின் விவசாய துறையில் பணியாற்றுவதற்காக இந்த மாத இறுதிக்குள் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை மறு அறிவித்தல் வரை நீடிப்பு

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த தடை உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல மழை இருக்கும். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்கள். மீ. அதிகபட்சமாக 75 கனமழைக்கு வாய்ப்புள்ளது.

போதைப்பொருளை விழுங்கியவாறு வந்த வெளிநாட்டவர் - கட்டுநாயக்கவில் கைது

கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளை விழுங்கிய 41 வயதான வெனிசுலா பிரஜையை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்படிகிலோகிராம் கரட் 240 ரூபா, ஒரு கிலோகிராம் போஞ்சி 240 ரூபா,ஒரு கிலோ பூசணிக்காய் 280 ரூபா, ஒரு கிலோகிராம் பீட்ரூட் 280 ரூபா, கத்திரிக்காய் 360 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமம் பகுதியில் பிச்சை எடுக்கும் பாடசாலை மாணவர்கள்

கதிர்காமம் விகாரையை சுற்றி பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்தக் குழந்தைகள் கதிர்காமம், கிரிவெஹெர ஆகிய விகாரைகளில் தனியாகவோ அல்லது பெற்றோருடன் சேர்ந்தோ பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது.

என் உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன் - மைத்திரி

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் தெரிவித்துள்ளார்.