சுற்றுலா பயணிகளுக்கு போதை பொருள் விற்பனையா?: சுற்றுலா பயண வழிகாட்டியொருவர் கைது
வெளிநாட்டு சுற்றுலா பயண வழிகாட்டியொருவர் ஹாஷ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை (23) நானுஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பொதியொன்றுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து 1.030 மில்லிகிராம் ஹாஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய சிலாபம் - ஹலவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
அத்துடன் சந்தேகநபருக்கு போதைப் பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் அவரது விநியோக வலையமைப்பு குறித்து நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.