யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கடற்படையினர் கைது: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North -east news updates 24.03.2024

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுடன் கடற்படையினர் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவருடன், பொதுமகன் ஒருவரும் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிலோ 400 கிராம் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

15 வயது சிறுமி கர்ப்பம் - அக்காவின் கணவர் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அக்காவின் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அத்தானோடு குடும்பமாக வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வவுனியாவில் சோளப் பயிற் செய்கைக்கான விதை பதப்படுத்தும் நிலையம் திறந்து வைப்பு

சோளப் பயிற் செய்கைக்கான விதைப் பதப்படுத்தும் நிலையம் விவசாய அமைச்சர் மகிந்த அபயவீர அவர்களால் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியாவிற்கு விஜயம் செய்த விவசாய அமைச்சர் மகிந்த அபயவீர பூவரசன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் நல்லின சோளப் பயிற்செய்கை நிலங்களை பார்வையிட்டதுடன், பயிற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

அனுமதி பத்திரங்கள் இன்றி பனை மரங்களை எடுத்து சென்ற நபர் கைது

யாழ்ப்பாணத்தில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி வாகனத்தில் சீவிய பனை மரங்களை எடுத்து சென்ற நபர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். வாகனத்தில் இருந்து 55 சீவிய பனை மரங்களை தாம் மீட்டுள்ளதாகவும் , அவற்றின் பெறுமதி சுமார் இரண்டு இலட்ச ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரெலோவின் தலைவராக மீண்டும் அடைக்கலநாதன் தெரிவு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.