தமிழ் சிவில் படை வீரரின் உடலம் இராணுவ மரியாதையுடன் அடக்கம்: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North and East news

தமிழ் சிவில் படை வீரரின் உடலம் இராணுவ மரியாதையுடன் அடக்கம்

முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுதந்திரபுரம் திட்டத்தில் பணியாற்றிய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் உடலம் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

OruvanOruvan

யாழில். பால் புரைக்கேறி 28 நாள் சிசு உயிரிழப்பு

தாய்ப்பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று யாழில் உயிரிழந்துள்ளது.தயார் நேற்றைய தினம் சிசுவுக்கு பால் ஊட்டி தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை அசைவின்றி காணப்படுவதனை அவதானித்து தயார், குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

கல்முனையில் ஆற்றில் குதித்த திருடனை ட்ரோன் உதவியுடன் தேடும் கடற்படை

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணின் சங்கிலியை அறுத்துச்சென்ற நபர் ஒருவரை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதியில் வைத்து பொதுமக்கள் மடக்கி பிடிக்க முற்பட்டபோது குறித்த நபர் ஆற்றில் குதித்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து ட்ரோன் கெமரா உதவியுடன் கடற்படை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.