மைத்திரிபால ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை காட்டிக்கொடுக்க வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல்

OruvanOruvan

Mano

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புள்ள பிரஜையாக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் யார் என்பது தமக்கு தெரியும் என மைத்திரிபால இரண்டு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் தொடர்பான தகவல்களை நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு தயக்கம் இன்றி அவர் தெரிவிக்க வேண்டும் எனவும், தகவல்களைப் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் மைத்திரியை அணுக வேண்டும் எனவும் மனோ கணேசன் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.