பொதுப் போக்குவரத்தில் தொடரும் பாலியல் சீண்டல்: சுதந்திரமாக பயணிக்க முடியாத நிலையில் பெண்கள்

OruvanOruvan

Women Harresments

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் பேருந்து, புகையிரதம் போன்றவற்றில் பயணம் செய்யும் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எண்ணிலடங்காதவை.

பெண்கள் வயது வரம்பின்றி வஞ்சிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

மனசாட்சியே இல்லாத மனிதர்கள் தனது மகளின் வயதில் உள்ள மகள்களுக்கும் , தனது தாயின் வயதில் உள்ள பெண்களையும் பொதுப்போக்குவரத்தின் போது சுதந்திரமாக பயணிக்கவிடாது பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்துவது என்பது தற்போது அதிகரித்து வருகின்றது.

தொடர்ந்து இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்கள் மத்தியில் பொதுப்போக்குவரத்தின் போது பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் பெண்களை வன்முறைக்குட்படுத்தும் நபர்களுக்கு 5 முதல் 10 வருடங்கள் சிறைதண்டனைக்கான வாய்ப்புகள் உள்ளதென சட்டங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுப்போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள் தீர்ந்தபாடில்லை.

இது தொடர்பில் பாதுகாப்பு துறைகள் மேற்கொள்ளும் திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனவா?

பேருந்தில் அல்லது புகையிரதத்தில் பயணிக்கும் பெண்களுக்கு பல விதத்தில் வன்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. உங்கள் தாய்க்கு , மகளுக்கு , சகோதரிக்கு இவ்வாறு ஏற்படலாம்.

சட்டத்தை செயற்படுத்துவதற்கான சிறந்த நேரம் இதுவே. எனவே பாரிய விளைவுகள் ஏற்பட இடமளிக்காது சரியான விதத்தில் தண்டனை வழங்கப்பட்டால் மற்றுமொருவர் அவ்வாறான குற்றத்தை இழைக்க இரண்டு தடவை யோசிக்கும் நிலை உருவாகும்.

சட்டப் புத்தகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது நீதியை நிலைநாட்ட வேண்டியதன் தேவை உள்ளது.

அனைவரையும் சரிசமமாக மதிக்கும் தலைமுறை உருவாகினால் இவ்வாறான பிரச்சினைகள் தாமாக தீர்ந்து போகும்.