நாணயத்தாள்களை முறைகேடாக பயன்படுத்தினால் தண்டனை: மத்திய வங்கியில் அவசர அறிவிப்பு

OruvanOruvan

Srilanka Central bank

இலங்கை மத்திய வங்கி நாணயத் தாள்களில் முறைகேடு தவறான பயன்பாடு மற்றும் மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில காலங்களாகவே இலங்கையில், நாணயத்தாள்களை பயன்படுத்தி பரிசுகள் வழங்குதல், பொக்கே போன்று வடிவதைத்தல் என பல வகையில் பயன்படுத்திவருகின்றனர்.

இலங்கை மத்திய வங்கியானது, இவ்வாறான விடயங்களை தவிர்க்கும் மற்றும் தடுக்கும் வகையில் தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், நாணயத் தாள்களைப் பயன்படுத்தி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் ஊடாக அத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் கவனம் செலுத்தி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan