அரசாங்கத்தை மாற்ற நடந்த சதித்திட்டம்: சபாநாயகர் வெளிப்படுத்திய தகவல்

OruvanOruvan

mahinda yappa

அரகலய போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி அல்லது அரசாங்கத்தை அமைக்குமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

சாபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரரணை ஒன்றை கொண்டுவந்திருந்தது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுக்கு இன்று இடம்பெற்றிருந்த நிலையில் 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சபாநாயகர் நாடாளுமன்றில் விசேட உரையாற்றியிருந்தார்.

“அரகலய போராட்டத்தின் போது சில அரச விரோதிகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் சதி செய்து சட்டவிரோத அரசாங்கத்தை நிறுவி நாட்டை லிபியா அல்லது ஆப்கானிஸ்தானாக மாற்ற முயற்சித்தனர்.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டில் உறுதியான இருந்ததால் அரசை முடக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.

தான் சபாநாயகராக நியமிக்கப்பட்ட நாள் முதல் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காகவும் இலங்கை குடியரசின் இருப்புக்காகவும் அதிகபட்ச ஆற்றலுடனும் மனசாட்சியுடனும் பாடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீ வைப்பு, கொலைகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பதில் பங்களித்த எவரும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபட்டதாக உலக வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.