அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

OruvanOruvan

Risk of miscarriage in pregnant women

அதிக வெப்பமான காலநிலை காரணமாக வெளியில் வேலை செய்யும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக இந்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 800 கர்ப்பிணிப் பெண்களை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

இவ்வாறான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

OruvanOruvan

பாதுகாப்பு யுக்திகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களின் ஹார்மோன் மாற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். அந்த ஹார்மோன் மாற்றம் அவர்களின் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும்.

இந்நிலையில் வெயில் காலத்தில் உருவாகும் வெப்பமும் கர்பிணிகளின் அதிகமான வெப்பமும் தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்கும். எனவேதான் உடலைக் குளுமைப் படுத்த மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நேரடி சூரிய வெளிச்சத்தைத் தவிர்த்திடுங்கள்.

வெளியே செல்லும் வேலை இருந்தாலும் அதிகாலை அல்லது சூரிய மறைவுக்குப் பின் செல்வது நல்லது.ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடித்தால்தான் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

வீட்டிற்குள் இருந்தாலும் சரி, வெளியே செல்வதானாலும் சரி வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளை அணியுங்கள் அல்லது ரேயான், லினென் ஆடைகளையும் அணியலாம்.

கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைத் தவிறுங்கள். வெயில் காலத்தில் நீச்சல் பயிற்சி சிறந்த வழி..

OruvanOruvan

உணவு கட்டுப்பாடு

உணவு விஷயத்தில் கஞ்சத்தனம் வேண்டாம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள். சாப்பிட வேண்டும் என்பதற்காக எந்நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க கூடாது.

குறிப்பாக இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து,நீர்ச்சத்து ஆகியவை மிக முக்கிய சத்துக்கள் என்பதை உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.தானியங்கள், கீரை, நீர்ச்த்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் என உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள்.

OruvanOruvan